கோவை: அதிமுக ஆட்சியில் பெண்களுக்கும், பெண் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
கோவை: அதிமுக ஆட்சியில் பெண்களுக்கும், பெண் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
கிணத்துக்கடவு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து இன்று சுந்தராபுரத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;
“எடப்பாடி பழனிச்சாமி தரையில் தவழ்ந்து சென்று சசிகலாவின் கால்களை பிடித்து முதலமைச்சராகி மக்கள் விரோத ஆட்சி நடத்தி விட்டு தமிழகம் வெற்றி நடைபோடுகிறது என்று பொய் பிரச்சாரம் செய்கின்றார்.
அதிமுக ஆட்சி மீது உள்ள கோபத்தை வருகிற 6ம் தேதி மக்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்குகள் மூலம் காட்ட வேண்டும். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்று பேசுகிறார்கள் ஆனால் தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவுகிறது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன் தக்க தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும். திமுக ஆட்சி அமைந்தவுடன் ஜூன் 3ம்தேதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளில் கொரோனா நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.