கோவை: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் திமுக இளைஞரணி சார்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று கோவை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மதுக்கரை பகுதி முழுவதும் சைக்கிள் பேரணி நடத்தி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனுக்கு வாக்கு சேகரித்தனர்.

மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சல்மான்கான், மதுக்கரை பேரூராட்சி கழகச் செயலாளர் ராம்ஜி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மதுக்கரை, மாச்சபாளையம், மதுக்கரை மார்க்கெட், மரப்பாலம் வரை சைக்கிளில் பேரணியாகச் சென்று திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தனர்.
இதில் மதுக்கரை ஒன்றிய பொருளாளர் E.B.ராஜேந்திரன், மாவட்ட துணை அமைப்பாளர் புவனேஷ் சந்திரசேகரன் மாவட்ட பொருப்புகுழு உறுப்பினர் சல்மான் பாட்ஷா மதுக்கரை பேரூராட்சி இளைஞரணி துணை அமைப்பாளர் சாம்பிராகஷ் உள்ளிட்டோர் இந்த சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டனர்.