உடுமலை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசை ஆதரித்து கே எஸ் அழகிரி தேர்தல் பிரச்சாரம்!

திருப்பூர்: உடுமலை அருகே உள்ள பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் உடுமலை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.


திருப்பூர்: உடுமலை அருகே உள்ள பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் உடுமலை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய அழகிரி, பாஜக மற்றும் அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என தாராபுரத்தில் மோடி கூறினார். ஆனால் இதுவரை அவர்களது பாரதிய ஜனதா கட்சி, ஆர் எஸ் எஸ் இந்து மகாசபை போன்ற இயக்கங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தலைமை பொறுப்பை ஏற்க அனுமதித்தது உண்டா என்று கேள்வி எழுப்பினார்.

உலகில் இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தி, சோனியா காந்தி, பிரதீபா பாட்டீல் உள்ளிட்ட பெண்களை தலைவர்கள் ஆக்கியும் பிரதமர்கள் ஆகியுள்ளது. நீங்கள் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவது தவறு. தாராபுரம் வந்த பிரதமர் ஒரு நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து பேசாமல், சாதாரண உள்ளூர் வேட்பாளர் போல் பேசிவிட்டு செல்வது இங்கு உள்ளவர்கள் எழுதிக் கொடுத்து பேசுவது போல் உள்ளது என்றார்.

மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைந்திருந்தது. ஆனால், இப்பொழுது மோடி ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை குறைந்து இருக்கும் சூழ்நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வாக காணப்படுகிறது.



அதேபோல, பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என கூறியது கலைஞர். பெண்களின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் தான் எங்களது கூட்டணியினர். எடப்பாடியும், பன்னீர்செல்வம் தமிழகத்தில் தாங்கள் செய்த தவறுக்கு தண்டனை பெறாமல் இருக்கவே பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்து வருகின்றனர்.

மேலும், அரசு கேபிள் வாரிய தலைவராகவும் அமைச்சராகவும் இருக்கும் ராதாகிருஷ்ணன் பணபலத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் எளிய தொண்டரான தென்னரசு போட்டியிடுகிறார். அவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...