கோவை: இந்தியாவின் பன்முகத் தன்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது அந்தக் கனவை மக்கள் நனவாக்க வேண்டும். என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யதத்தின் தலைவர் கமல்ஹாசன் அத்தொகுதிக்குட்பட்ட காந்திபுரம் பகுதியில் வீதி வீதியாக சென்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது கமல்ஹாசன் பேசியதாவது;
இனி கோவை தெற்கு தான் என் முகம். கோவை தெற்கு என்றால் இனி என் முகம் தான் இந்திய அளவில் அனைவருக்கும் நினைவிற்கு வரவேண்டும். நான் தேர்ந்தெடுத்த தொகுதிகயை இந்தியா திரும்பி பார்க்க வேண்டும் என்று நினைத்தேன், வெற்றி பெறச் செய்யுங்கள் அதைச் செய்து காட்டுகிறேன்.

இந்த பகுதியில் ஒரு விதையை போட நீங்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும். மேலும், இங்கே உள்ள இளைஞர்கள் அதை செய்ய வேண்டும். மற்ற கட்சிகள் 40 ஆண்டு காலத்தில் செய்யாததை 4 வருடத்தில் செய்து முடிப்பேன். மக்கள் சமூக நல்லிணக்கத்தை விரும்புகிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும், யார் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்.
என்னை சில கட்சிகளின் பி டீம்என்கிறார்கள்.காந்தியின் பி டீம் நான். காந்தியின் வழியில் நேர்மையாக உழைப்பவன் நான். நேர்மை மட்டும் அரசியலுக்கு போதுமா என்று கேட்கிறார்கள், நேர்மை தான் அடிப்படை. நேரில் செல்ல முடியாத பல இடங்களுக்கு இணைய வழியாக மக்களுடன் உரையாடி கொண்டிருக்கிறேன். அப்போது என்னிடம் பேசும் பல பெண்கள் தங்கள் பகுதியில் பாதுகாப்பு இல்லை என்கிறார்கள். ஆண்களை பார்த்து பயப்படுவதாக கூறுகிறார்கள்.
பெண்களுக்கு பாதுகாப்பாக பல ஆண்கள் இருக்கிறார்கள் அதற்குக் குந்தகம் விளைவிக்கும் விதத்தில் டாஸ்மாக் நடுவில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவைக்கு அதிகமான டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும். குடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து மீட்டெடுக்க வேண்டும். பல இடங்களில் மருந்தகங்களை விட டாஸ்மாக் அதிகம் இருக்கிறது. இந்நிலையை மாற்ற வேண்டும்.
இலவசம் என்றும் ஏழ்மையை போக்காது. அதற்கு மக்களின் பங்களிப்பின்றி எனது கனவை சாதிக்க முடியாது. இந்தியாவின் பன்முகத்தன்மையில் எனக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது. அந்த தேசிய கனவை மக்கள் நனவாக்க வேண்டும். நான் பிக் பாஸில் பங்கேற்றது வேறு எந்த அரசியல்வாதிகளும் கிடைக்காத வாய்ப்பு. மக்களை எளிதாக சென்றடையும் ஊடகம் அது. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.