கோவை: தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக அவரது மகள் உருக்கமாக பரப்புரை மேற்கொண்டார்.

கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியுடன் அவரது மகள் வந்தனா என்கிற சாரங்கி பரப்புரையில்ஈடுபட்டார். 10-ம் வகுப்பு மாணவியான இவர் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடையே அமைச்சர் வேலுமணி மகள் வந்தனா பேசியதாவது;
"கொரோனா நோய் அதிகமாக பரவிட்டு இருந்தப்ப வீடு வீடாகப் போய் உதவி செஞ்சது அப்பா தான். எல்லா வீட்டுக்கும் தேவையான அரிசி பருப்பு மளிகை சாமான் காய்கறி எல்லாம் அனுப்பி வச்சாரு. அவர் எப்படி உதவி செய்வார்னு உங்களுக்கே நல்லா தெரியும். அவரு உங்க குடும்பத்துல ஒருத்தரா எப்பவும் உதவி செய்வாரு. இப்ப நாலாவது முறையா தேர்தலில்ல போட்டி போடறாரு. உங்க குடும்பத்துல ஒருத்தரா நெனைச்சு அவரை ஜெயிக்க வைக்கணும்.

கோவை நகரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஏகப்பட்ட வேலை செஞ்சு தந்திருக்காங்க. தார் ரோடு, பாலம் என அப்பா நிறைய வேலை முடிச்சு தந்திருக்கிறாரு. அப்பா உள்ளாட்சித் துறையில் அமைச்சராக இருந்த அஞ்சு வருஷத்துல அம்பது வருஷத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேத்திட்டாரு. உங்களில் ஒருத்தரா நினைச்சு அவரை இந்த தேர்தலில் ஜெயிக்க வைக்கணும்.” இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின்மகள் உருக்கமாக பேசியது அனைவரையும் கவர்ந்தது.