கோவை; திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் அதிகரித்துவிடும். எனக்கூறி கோவை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் பரப்புரையில் ஈடுபட்டார்.
கோவை: திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் அதிகரித்துவிடும். எனக்கூறி கோவை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் பரப்புரையில் ஈடுபட்டார்.

கோவை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் கணபதி, சங்கனூர் சாலை, கணபதி மார்க்கெட் உட்பட பல்வேறு பகுதிகளில் பரபரப்புரை மேற்கொண்டார்.
பரப்புரையின் போது அம்மன் அர்ச்சுனன் பேசியதாவது:
“திமுக ஆட்சி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மின் வெட்டு. அடுத்து பெண்களை இழிவாக பேசுவது தான், இது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபகாலமாக திமுகவினரின் செயல்கள் இருக்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் கட்டவிழ்த்து விடப்படும். நில அபகரிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருந்தது. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் மத மோதல்களும் நடக்கவில்லை.

தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எளிமையானவர். அவரை பொதுமக்கள் எளிதாக அணுகலாம். கோவை மாவட்டம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கண்டுள்ளது. இதற்காக அமைச்சர் எஸ். பி. வேலுமணி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
மத்திய அரசின் உதவி இருந்தால்தான் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியும், ஆதலால் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுடன் இணக்கமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால்தான் தமிழகத்துக்கு இத்தனை வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர முடிந்தது. நான் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த போது உக்கடம் வாலாங்குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டன. அதுபோல வடக்கு தொகுதிகளும் மேலும் பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வேன்.” இவ்வாறு அம்மன் அர்ஜுனன் பேசினார்.