தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்த பாஜகவை புறக்கணிக்கக் கோரும் வாலிபர் சங்கம்!

கோவை: நீட் தேர்வை கொண்டு வந்து தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்து மாணவர்களை தற்கொலைக்கு தள்ளிய பாஜகவை புறக்கணிக்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதியில் வாலிபர் சங்கத்தினர் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர்.



கோவை: நீட் தேர்வை கொண்டு வந்து தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்துமாணவர்களை தற்கொலைக்கு தள்ளிய பாஜகவை புறக்கணிக்க வேண்டும் எனகோவை தெற்கு தொகுதியில் வாலிபர் சங்கத்தினர் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர்.

திமுக தலைமையிலான கூட்டணியின் கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மயூராஜெயக்குமார் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தெற்கு தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக வியாழனன்று தெருமுனை பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் எஸ்.ஸ்டாலின்குமார் தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் வாலிபர் சங்க செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

வாலிபர் சங்கத்தின் தலைவர்கள் பேசுகையில்,

“மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கங்களின் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக தமிழகம் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட கட்டமைப்பில் வலுவாக உள்ளது.

இதன்காரணமாக இந்தியாவிலேயே அதிகமான அரசு மருத்துவ கல்லூரிகள்தமிழகத்தில் உள்ளன. இதனால் கிராமப்புற ஏழைஎளிய மாணவர்கள் மருத்துவர்களாக உயர்ந்தனர். இதனை சீர்குலைக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக மத்திய பாஜக அரசு நீட்தேர்வை கொண்டுவந்து மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்தது. ஏரளாமான மாணவர்களை தற்கொலைக்கு தள்ளியது.

மாநில உரிமையை தொடர்ந்து பறித்து வருவது, ஜிஎஸ்டி வரியால் சிறுகுறு தொழில்களை அழித்தது என தொடர்ந்து மக்கள் விரோத ஆட்சியாக பாஜக அரசு உள்ளது. இந்த சர்வாதிகார மக்கள் விரோத கட்சிகளுக்கு காவடி தூக்கும் வேலையை மாநில அதிமுக செய்து வருகிறது. கோவையின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் என்கிற வெளிநாட்டு நிறுவனத்திடம் தாரை வார்த்த அதிமுக பாஜக கூட்டணியை வீழ்துவது இளைஞர்களின் பிரதான கடமை” என வலியுறுத்தினர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...