கவுண்டம்பாளையம் தொகுதியில் சுரபி பங்கஜ் தீவிர பரப்புரை

கோவை: கவுண்டம்பாளையம் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் மநீம வேட்பாளர் சுரபி பங்கஜ் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: கவுண்டம்பாளையம் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் மநீம வேட்பாளர் சுரபி பங்கஜ் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.



கவுண்டம்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சுரபி பங்கஜ் கடந்த 12 நாட்களாக 400 கி.மீ தூரம் வரை நடந்தே சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.



இன்றும் சுரபி பங்கஜ் கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட என்ஜிஓ காலனி, செங்காளிபாளையம், இடிகரை போன்ற பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்குச் சேகரிப்பின்போது, “கவுண்டம்பாளையம் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் ஏற்பாடு செய்து தரப்படும்.



நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர் படிப்பைத் தொடர முடியாமல் போனால், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும். மழை, வெள்ளம், நோய்த்தொற்று போன்ற இக்கட்டான காலங்களில் விரைந்து செயல்பட்டு தேவையான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று உறுதி அளித்தார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...