கோவை; கோவை குடிநீர் விநியோகத்துக்கான பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என கோவை மாவட்டத்துக்கான திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் கோவை தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;
“கோயம்புத்தூர் மாநகராட்சி- பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்துக்கு இடையேயான ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். கோயம்புத்தூர் மாநகராட்சியே மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க காந்திபுரம், உக்கடம் பீளமேடு, அரசு மருத்துவமனை, சிங்காநல்லூர் hopes கல்லூரி, கோவை ரயில் நிலையம் ஆகிய இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கப்படும்.
கோயம்புத்தூர் ஐடி பார்க் இரண்டாம் நிலை தொடங்கப்படும். ஒருங்கிணைந்த அனைத்து வசதிகளுடன் கூடிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
கோயம்புத்தூர் மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்படும். பல் மருத்துவமனை கால்நடை மருத்துவமனை ஆகியற்றுக்கு தனி கட்டிட வசதிகள் செய்து தரப்படும்.
2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட உயர் மட்ட மேம்பாலங்கள் பணி அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.
2009 ஆம் ஆண்டு கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் தொகுதியில் போடப்பட்ட பாதாளசாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.
சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் வீட்டுவசதி வாரியத்தின் 960 அடுக்குமாடி குடியிருப்புகள் சீரமைக்கப்படும். சிங்காநல்லூர் மற்றும் ஆனைமலையில் அரசு மருத்துவமனைகள் கட்டப்படும்.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சின்ன தடாகத்தில் 186 செங்கல் சூளைகள் மீண்டும் இயங்கும் வகையில் சுற்றுச்சூழல் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும். இதனால் 3 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைவார்கள்.
சின்ன தடாகம் அரசு மேல்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்படும். கைவினை ஊழியர்களுக்கு தனி வாரியம் அமைக்கப்படும். ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும்.
சுகாதாரப் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி உறுதி செய்யப்படும் அவர்களுக்கு மாநகராட்சியில் வீடுகள் கட்டித் தரப்படும். சிறு குறு தொழில் வளர்ச்சிக்கு திமுக அரசு துணை நிற்கும்.” இவ்வாறு கோவை மாவட்டத்துக்கான தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.