ரஜினிக்கு பாராட்டுக்கள்; டிவிட்டர் அரசியல்வாதி கமல்ஹாசன், எத்தனை நாள் மக்களோடு இருந்துள்ளார்..? - வானதி சீனிவாசன் கேள்வி

கோவை: இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்தற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு 51 ஆவது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.


கோவை: இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்தற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு 51 ஆவது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த பாராட்டுக்களை தெரிவித்த பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன், ரஜினிகாந்துக்கு இந்த விருது கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.



கோவை காந்திபுரம் பகுதியில் கோவை தெற்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பேசிய அவர், தமிழகம் பெருமைப்படும் வகையில் திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்த் பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆன்மிக அரசியல் என்ற மக்கள் விரும்பும் அரசியலை ரஜினிகாந்த் கைவிட்டது ஏமாற்றம் அளித்தது எனவும், பொருத்தமான நபருக்கு விருது வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர், ரஜினிகாந்த்திற்கு பாஜக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தார்.

"யாகவாராயினும் நா காக்க" என திருக்குறளை உதாராணம் காட்டிய கமல்ஹாசனுக்கு, இந்த திருக்குறள் "துக்காடா" அரசியல்வாதி என தன் மீது மநீமவினர் விமர்சனம் செய்யும் போது ஏன் நினைவில் வரவில்லை என கேட்டார். மைக் வேலை செய்யாததால் கமல்ஹாசன் டார்ச் லைட்டை வீசியது, அவர் பொறுமை, பக்குவம் பெறவில்லை என்பது காட்டுகிறது எனவும், சிறிய ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியாதவர், கமல் என்று விமர்சித்தார்.

வெற்றி, தோல்வி என எதை மக்கள் தந்தாலும், மக்களுக்கு உழைப்பது தான் அரசியலுக்கு அடிப்படை எனவும், 66 வயதான தனக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கும் கமல்ஹாசன் நீண்ட காலம் அரசியலில் பயிற்சி எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும், வன்முறை அரசியலில் திமுகவினர் ஈடுபடுகின்றனர் எனவும் குற்றம் சாட்டிய அவர், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது.

கோவையில் பதட்டத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்யவில்லை எனவும், திமுக ஆட்சியில் தான் கோவையில் குண்டு வெடிப்புகள் நடைபெற்றது. அதற்காக திமுக மன்னிப்பு கேட்க வேண்டும், பெண்களை இழிவாக பேசிய உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் லியோனியை திமுக கண்டித்ததா? என்று சாடினார்.

டிவிட்டர் அரசியல்வாதி கமல்ஹாசன், நேரடியாக எத்தனை நாள் மக்களோடு இருந்துள்ளார் எனவும், களத்தில் நின்று கமல்ஹாசன் என்ன செய்தார் என்று அவர் கேள்வி எழுப்பினார். கோவை அமைதிப் பூங்காவாக நிலவ வேண்டும் என அனைத்து தரப்பினரும் முயற்சிக்கின்றனர் எனவும், பாஜக அத்தனை தரப்பு மக்களுக்குமான கட்சி எனவும் அவர் தெரிவித்தார்.

கோவையில் உபி முதலமைச்சர் பங்கேற்ற ஊர்வலத்தின் போது செருப்புக்கடையில் கல் வீசியது சிறு சம்பவம் எனவும், அதை ஊதி பெரிதாக்குவது யார் எனக் கேட்டார். உபி முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் நிகழ்ச்சியில் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்காதது குறித்த கேள்விக்கு, கோவை தெற்கு நிகழ்ச்சி என்பதால் தான் அதிமுகவினர் பங்கேற்கவில்லை என பதிலளித்தார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...