மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் இந்தியாவில் தமிழகம் முன்மாதிரியாக செயல்பட்டுள்ளது - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

கோவை: மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் இந்தியாவில் தமிழகம் முன்மாதிரியாக செயல்பட்டு உள்ளதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.


கோவை: மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் இந்தியாவில் தமிழகம் முன்மாதிரியாக செயல்பட்டு உள்ளதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தனது ஆதரவாளர்களுடன் பொள்ளாச்சி நகர பகுதியில் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு பகுதியில் உள்ள அண்ணா நகர், இந்திரா நகர், கே எல் சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, குடிமராமத்து திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு முன்னோடியாக தேவம்பாடி வலசு குளம் 3 ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. இதனால் சுற்றுப்புறத்தில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகின்றன.

அதேபோல், கோதவாடிகுளம் கரை உயர்த்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாய்க்கால்கள், வரத்து வாய்க்கால்கள் கடைமடை வரை தூர்வாரப்பட்டுள்ளது . மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை சேமிக்க 24 தடுப்பணைகள் மற்றும் கிழக்கு, வடக்கு, மேற்கு ஒன்றியங்களில் 200 சிறிய தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவிற்கு எடுத்துக்காட்டாக தமிழகத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் முன்னோடியாக பணிகள் நடைபெற்று நிறைவடையும் தருவாயில் உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...