பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் உள்ள கிராமப் புறங்களில் எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் உள்ள கிராமப் புறங்களில் எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை எனதிமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
பொள்ளாச்சி தெரகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜன் கிராமம் கிராமமாக தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
பொள்ளாச்சி அருகே பனிக்கம்பட்டி கிராமத்தில் வாக்குச் சேகரிக்க சென்ற அவருக்கு ஏராளமான பெண்கள் பூரண கும்ப மரியாதை செய்தும், ஆரத்தி எடுத்தும் நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது திமுக தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி தமக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தமது பரப்புரை குறித்து மருத்துவர் வரதராஜன் பேசியதாவது;
“கிராம மக்கள் எழுச்சியுடன் வரவேற்கின்றனர். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி மீது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் கழிப்பிடம், சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இலவச வீட்டுமனைபட்டா வழங்கப்படவில்லை.
அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் கிராமங்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும். பொள்ளாச்சி தொகுதியில் மாபெரும் வெற்றி பெறுவேன்.” இவ்வாறு மருத்துவர் வரதராஜன் கூறினார்.