2016 தேர்தலில் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

நீலகிரி: 2016 தேர்தலில் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக குன்னூர் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.


நீலகிரி: 2016 தேர்தலில் ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக உதகை தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம்குன்னூர் அதிமுக வேட்பாளர் கப்பச்சிவினோத், உதகை பாஜக வேட்பாளர் போஜராஜன் ஆகியோரை ஆதரித்து குன்னூரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது;



“2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளேன். இந்தியாவிலேயே கல்வியில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில்தான் தடையில்லா மின்சாரம் தரப்படுகிறது. தொழில் முன்னேற்ற மாநாடு மூலம் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.



திமுக தலைவர்கள் அவர்களின் குடும்பத்தை மட்டுமே கவனிக்கின்றனர். நாட்டுமக்களை பாதுகாக்கும் கட்சி அதிமுக மட்டுமே. அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட உயர் பதவிக்கு வர முடியும். திமுகவில் வாரிசுகள் மட்டுமே பதவிக்கு வரமுடியும்! ஸ்டாலின் பேசுவதெல்லாம் பொய் பிரச்சாரம். அவர் பேசுவதில் ஒரு சதவிகிதம் கூட உண்மை கிடையாது. மக்களை ஏமாற்றி அதன் மூலம் சம்பாதிக்கிறார்கள். பொய் பேசுவதற்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தரலாம். அரசின் 1100 உதவி எண்ணுக்கு ஒரு லட்சம் பேர் வரை போன் செய்து பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர்.

ஆனால், மு.க. ஸ்டாலின் மக்களிடம் மனு வாங்கி ஏமாற்றி வருகிறார். அடுத்தவரை களங்கப்படுத்தி துன்பப்படுத்துவது திமுக. ஆ. ராசாவின் பேச்சின் மூலம் பெண்கள் இழிவு படுத்தப் பட்டுள்ளனர். அதிமுக மக்களை மகிழ்சியடையச் செய்யும் கட்சியாகும். குன்னூரில் எமரால்டு கூட்டுக் குடிநீர் திட்டத்தை அமல் படுதி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு அதிமுக அரசு தீர்வு கண்டுள்ளது. கோத்தகிரி பகுதியில் அளக்கரை குடிநீர் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.



படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீலகிரி உலக அளவில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றப்படும். ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சியாக அதிமுக திகழ்கிறது. விவசாயிகளின் பயிர் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...