கோவை: கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கள்ளப்பணத்தை கமல்ஹாசன் செலவழித்து கொண்டுள்ளார், என இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ், கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவை: கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கள்ளப்பணத்தை கமல்ஹாசன் செலவழித்து கொண்டுள்ளார், என இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ், கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவை காட்டூர் பகுதியில், கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், வானதி சீனிவாசனுக்கு வாக்களிப்பது, நரேந்திர மோடிக்கு நேரடியாக வாக்களிப்பது போல எனத் தெரிவித்தார்.
மேலும், மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நடிக்க தான் தெரியும் எனவும், கமல்ஹாசனுக்கு வாக்களிப்பது என்பது வாக்கரசி போடுவது போல எனவும் அவர் கூறினார்.
கமல்ஹாசன் குடும்பத்தை கூட நடத்த தெரியாதவர் எனவும், ஒரு மனைவியை கூட காப்பாற்ற முடியாதவர் எனவும் கூறிய அவர், 3 மனைவிகளுடனும் வாழ முடியவில்லை என்றால், யார் மீது தவறு என கேள்வி எழுப்பினார். கமல்ஹாசன் நிர்வாகம் தெரியாதவர். தனிநபர் ஒழுக்கம் இல்லாதவர் எனவும், கமல்ஹாசன் வக்கிரப்புத்தி கொண்டவர் எனவும் அவர் தெரிவித்தார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கள்ளப்பணத்தை கமல்ஹாசன் செலவழித்து கொண்டுள்ளார் எனவும், தேர்தல் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சி அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.