அதிமுக கூட்டணியை ஆதரித்து கோவை மாவட்ட வன்னியர் சங்கம் களப்பணி மேற்கொள்ளும் என அறிவிப்பு!

கோவை: கோவையில் வன்னியர் சமூக மக்களின் பல ஆண்டு கோரிக்கையான உள் இட ஒதுக்கிட்டை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவையில் வன்னியர் சமூக மக்களின் பல ஆண்டு கோரிக்கையான உள் இட ஒதுக்கிட்டை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.



அதைத் தொடர்ந்து, வரும் சட்டமன்ற தேர்தலில் வன்னியர் சங்கத்தினர் அனைவரும் அஇஅதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுடன் களப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும், கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் சேர்த்து தங்கள் சங்கத்தினர் மட்டும் 1 லட்சம் பேருக்கு மேலாக இருக்கிறார்கள். எங்கள் ஆதரவு முழுவதும் அதிமுக கூட்டணிக்கு தான் என்றனர்.

மேலும், தங்களுக்கு கிடைத்த உள் ஒதுக்கீட்டை பெற்றுத்தந்த பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அண்புமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். தங்கள் சமூகத்திற்கான உள் ஒதுக்கீட்டுக்காக தங்களுக்காக ஆதரவாக பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கும் தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, இன்று கோவை வர உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து உள்ஒதுக்கீடு வழங்கியதற்கான தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இன்னும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...