மக்கள் பிரச்சினைகளில் களம் கண்டாரா டிவிட்டர் கமல் என வானதி சீனிவாசன் கேள்வி!

கோவை: மக்களுடன் எத்தனை பிரச்சினைகளில் ட்விட்டர் அரசியல்வாதி கமல்ஹாசன் உடன் இருந்திருக்கிறார் என்று கோவை தெற்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.


கோவை: மக்களுடன் எத்தனை பிரச்சினைகளில் ட்விட்டர் அரசியல்வாதி கமல்ஹாசன் உடன் இருந்திருக்கிறார் என்று கோவை தெற்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

கோவை காந்திபுரம் பா.ஜ.க தேர்தல் பணிமனையில் அக்கட்சியின் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:



“ரஜினிகாந்த் சாதனையை போற்றும்விதமாக மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்திருக்கிறது. விருது பொருத்தமான நபருக்கு விருது கொடுக்கப்படுவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். திருக்குறளை உதாரணம் காட்டிப் பேசிய கமல்ஹாசனுக்கு என்னை பற்றி கருத்து கூறும் போது ஏன் அது நினைவிற்கு வரவில்லை.

அரசியலில் வெற்றியோ தோல்வியோ மக்கள் கொடுப்பதை ஏற்றுக்கொண்டு சேவை செய்ய வேண்டும். அந்தப் பக்குவம் இன்னும் கமலஹாசனுக்கு வரவில்லை. அரசியலில் கமல்ஹாசன் நீண்ட பயிற்சி எடுக்க வேண்டும். தமிழக மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக திமுக செயல்படுகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி பாஜக என்ற போலி பரப்புரையின் மூலம் தமிழக மக்கள் மனதில் பதற்றத்தை ஏற்படுத்த திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் முயற்சிக்கின்றன.

ட்விட்டர் அரசியல்வாதி கமல் இதுவரை எத்தனை மக்கள் பிரச்சனைகளில் களத்தில் இருந்திருக்கிறார். கோவை மாவட்டத்தின் பிரச்சனைகளை தீர்க்க நான் பாடுபட்டுள்ளேன். அரசியலில் வென்றாலும் தோற்றாலும் நான் மக்களுடன் களத்தில் இருப்பேன். அனைத்து தரப்பு மக்களுக்கானதாக பா.ஜ.க அரசு திகழ்கிறது. பா.ஜ.க ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுவதை அந்த சமூகத்தினரே மறுத்துள்ளனர். சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பெண்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

பெண்கள் குறித்து இழிவாக பேசிவரும் கட்சியினரை திமுக தலைவர் கண்டிப்பதில்லை. பெண்களை மதித்து அவர்களுக்கான உரிமையை காக்கும் கட்சியாக என்றைக்குமே பாஜக இருந்திருக்கிறது. என் மீது போலி குற்றச்சாட்டுகளை முன்வைத்து சமூக வலைதளங்களில் காணொளி வெளியிட்டவர்கள் மீது புகார் அளித்துள்ளேன். சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.” இவ்வாறு வானதி சீனிவாசன் பேட்டியில் கூறினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...