நீலகிரி: இன்னும் வாக்கு பதிவிற்கு ஐந்தே நாட்கள் உள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இன்று உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

பரப்புரையின் போது, எடப்பாடி பழனிச்சாமி கூடலூருக்கு ஹெலிகாப்டர் மூலம் வருவதாக தகவல் அறிந்தேன். அவர் வர வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், இதே நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்ட போது, ஏன் இதே ஹெலிகாப்டரில் வந்து பார்வையிடவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால், நீலகரி நிலச்சரிவு ஏற்பட்ட போது நான் வந்து பார்வையிட்டேன். அப்போது, நிவாரண நிதியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ ராசா, திருச்சி சிவா, மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தோம், என்றார்.
கருத்துக்கணிப்புகள் குறித்து பேசிய ஸ்டாலின், அனைத்து கருத்துக் கணிப்புகளும் திமுக பெருவாரியான வெற்றி பெரும் என்று சொல்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியா, புதிய தலைமுறை, தந்தி, தி இந்து போன்ற ஊடகங்கள் திமுக வெற்றி பெறும் என்று சொல்கிறது. அந்த ஊடகங்களை அதிமுக அரசு மிரட்டியும், அரசு கேபிள்களில் இருந்து நீக்கியும் வருகிறது. ஆனால், இது நீடிக்காது மே 2 க்குப் பிறகு கதையே வேறு, என்று ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து பேசிய, மு. க. ஸ்டாலின், முதல்வர் பழனிச்சாமியை உதவாக்கரை என்றும், தவழ்ந்து போறதுல கில்லாடி என்றும் விமர்சித்தார். இதைச் சொன்னால் நான் என்ன பாம்பா, பல்லியா என கேட்கிறார். பாம்பு, பல்லி கிட்ட கூட விஷம் கம்மியா தான் இருக்கும், ஆனால் பழனிச்சாமி போன்ற துரோகிகளிடம் விஷம் அதிகமா இருக்கும், என்று காட்டமாக விமர்சித்தார் ஸ்டாலின்.