கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை முறையாக பின்பற்ற வேண்டும் - அரசியல் கட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அரசியல் கட்சியினர் காண தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. அதை அனைத்து அரசியல் கட்சியினரும் முறையாக பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக, தற்போது பரவலை தடுக்கும் வகையில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பொது இடங்களில் பிரச்சாரம் செய்யும்போது முகக்கவசம் அணிய வேண்டும்.

மேலும், பொது கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுக்கூட்டங்களில் பங்கேற்பாளர்கள் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் செய்யவேண்டும். எந்த அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் ஜாதி, இனம், மதம், மொழி ஆகியவற்றுக்கிடையே வெறுப்பையும் ஆவேசத்தையும் தூண்டுகிற அல்லது அதிகப்படுத்தும் செயலில் ஈடுபடக்கூடாது. கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களை தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக்கூடாது.

அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் நடந்த உத்தேசித்த கூட்டங்களில் மற்றும் நாள் நேரம் ஆகி விவரங்களை முன்கூட்டியே தெரிவித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெறவேண்டும். வாக்காளர்கள் தவிர தேர்தல் ஆணையத்தால் உரிய அனுமதி பெறாதவர்கள் எவரும் வாக்குச் சாவடிக்குள் செல்லக்கூடாது.

மேலும், தேர்தல் நடைமுறைகளில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் வேட்பாளர்கள் அவர்கள் முகவர்கள் தேர்தல் அலுவலரிடம் புகார் செய்யலாம். அனைத்து தேர்தல் நடைமுறை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது வாக்குப்பதிவு நாளன்று எல்லா அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களும் தேர்தல் அலுவலர்கள் உடன் ஒத்துழைத்து அமைதியாகவும் நல்ல முறையில் தேர்தல் நடத்தி முடிக்கவும் வாக்காளர்களுக்கு எந்த தடையும் இல்லாமல் வாக்களிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...