மேட்டுப்பாளையத்தில் வாழை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் - திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரச்சாரம்

கோவை: மேட்டுப்பாளையத்தில் வாழை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.



கோவை: மேட்டுப்பாளையத்தில் வாழை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி காங்கிரஸ் வேட்பாளர் கணேசன், கூடலூர் திமுக வேட்பாளர் காசி லிங்கம், குன்னூர் திமுக வேட்பாளர் ராமசந்திரன், மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் டி.ஆர். சண்முகசுந்தரம் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியதாவது: 

தமிழக முதலமைச்சர் ஹெலிகாப்டரில் பிரசாரத்திற்கு வருகிறார். இதே முதல்வர் நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்ட போது ஹெலிகாப்டரில் வந்து பார்வையிட்டாரா?. நான் சென்று பார்வையிட்டேன். திமுக சார்பாக ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டது. திமுகவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இதனை மக்களிடம் இங்கு வந்துள்ளவர்களிடம் உரிமையோடு கேட்கிறேன் என்றார். 

மேட்டுப்பாளையம் வேட்பாளர் டி.ஆர்.சண்முகசுந்தரத்திற்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றினார். மக்களோடு மக்களாக இருப்பவர் தான் எங்கள் வேட்பாளர். அதே போல் குன்னூர் தொகுதி வேட்பாளர் ராமசந்திரன் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக அமைச்சராக இருந்துள்ளார். 

அப்போது, அவரது மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர். அதே போல் கூடலூர் தொகுதி வேட்பாளர் காசி லிங்கம் நகர தலைவராக இருந்துள்ளார். அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். அதே போல் ஊட்டி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கனேஷ்க்கு கை சின்னத்தில் ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இப்போது ஒரு வார காலமாக கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கிறது. எல்லா கருத்துக்கணிப்புகளிலும் திமுக அணி தான் வெற்றி பெற போகிறது என வந்துள்ளது. தொலைக்காட்சிகளில் திமுக வெற்றி பெறும் என வந்ததும் அந்த தொலைக்காட்சிகளை ஆளும் கட்சியினர் மிரட்டியுள்ளனர். அரசு கேபிளில் கட் செய்துள்ளனர்.

முதல் முதலாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது 200 தொகுதிகளில் வெற்றி என எண்ணியிருந்தேன். இப்போது பார்க்கையில் 235 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை வந்துள்ளது. பாம்பா, பள்ளியா ஊர்ந்து செல்ல என முதல்வர் கேட்கிறார். பாம்பு, பள்ளிகளில் கூட விஷம் கம்பியாக தான் இருக்கும். வாட்ஸ் ஆப்களில் வீடியோ வந்துள்ளது. மானம்கெட்ட பொழப்பு. 

மக்களுக்கு நன்றாக தெரியும் இந்த அரசாங்கம் கொள்ளை அடித்த அரசாங்கம், ஊழல் செய்த அரசாங்கம், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தாக்கிய அரசாங்கம், அரசு ஊழியர்கள் உட்பட எல்லாவற்றையும் போராட வைத்த அரசாங்கம்.

பொல்லாத அரசாங்கம் என்பதற்கு பொள்ளாச்சியே சாட்சி. பிரதமர் மோடி திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார். பொள்ளாச்சி நடைபெற்ற சம்பவம் அதை நினைத்துப் பார்க்க வேண்டும். 400 பெண்களுக்கு மேல் பாலியல் வன்கொடுமைகள் செய்யப்பட்டுள்ளனர். இது அதிமுக ஆட்சியில் நடந்தது. இதை பிரதமர் மோடி தெரிந்து கொள்ள வேண்டும். 

நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. ஒரே ஒரு அதிமுக எம்பி ஒபி எஸ் மகன் மட்டும் வெற்றி பெற்றார். அவர் பிஜேபி எம்பியாக செயல்படுகிறார். எனவே இந்த தேர்தலில் அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் கூட வெற்றி பெற கூடாது. அப்படி வெற்றி பெற்றால் அவர்கள் பிஜேபி எம்.எல்.ஏ வாக செயல்படுவார்கள்.

மதுரைக்கு வரும் பிரதமர் மோடியிடம் கேட்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனை உள்ளதா என பிரதமர் மோடி போய் பார்க்க வேண்டும். அதில் அடிக்கல் நாட்டிய செங்கல், அதை உதயநிதி எடுத்துவிட்டு போயிட்டார்.

மதுரையில் பிரதமருடன் முதல்வர் பழனிசாமி இருப்பார். அவருக்கு நான் கோரிக்கை வைக்கிறேன். சிஏஏ, நீட் தேர்வு, மூன்று வேளாண் சட்டம் இதை நாங்கள் ஏற்கவில்லை திரும்பப் பெறுங்கள் என பிரதமரிடம் முதல்வர் கேட்க வேண்டும். அதேபோல, 7 பேர் விடுதலை குறித்தும் பிரதமரிடம் கேட்க வேண்டும்.

பழனிசாமி அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி உள்ளது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு போட்டுள்ளது. மோடியை பார்த்து குனிந்தாவது கேட்கவேண்டும் இதை வாபஸ் பெறுங்கள் என்று.

இப்படி முடிவு எடுக்க தைரியம் இல்லாத, வக்கு இல்லாத முதல்வரை தோற்கடிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலை வாசி உயர்வு மிகவும் அதிகமாக ஏறியுள்ளது. விலை வாசிகளை கட்டுப்படுத்த தமிழகம் வளர்ச்சிக்கு திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் இருந்த உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம் குஜராத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அது மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்படும். குன்னூரில் அரசு கலை கல்லூரி, பச்சை தேயிலைக்கு ஆதரவிலை கட்டுமான வளர்ச்சிக்கு மாஸ்ட பிளான். அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும். சுற்றுலா மேம்படுத்தப்படும். இது போன்று பல்வேறு திட்டங் கள் செயல்படுத்தப்படும். 

அதேபோல, மேட்டுப்பாளையத்தில் வாழை ஆராய்ச்சி மையம், அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும் எனவும் மாநில உரிமைகளை காக்க, சுயமரியாதை காக்க திமுக வெற்றி பெற வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...