கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, இன்று உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவை வந்திருந்தார்.

அவரை வரவேற்கும் விதமாக, ஆயிரக்கணக்கான வாகனங்களில் காவி கொடிகளை ஏந்தியபடி பாஜகவினர் ஊர்வலமாக,
சென்றனர். அப்போது, ஊர்வலம் டவுன்ஹால்,வ்பெரிய கடைவீதி பகுதியை கடக்கும் போது அங்கே திறந்திருந்த கடைகளை மூடும் படி கூறியுள்ளதாக தெரிவிக்கிறது. குறிப்பாக, இஸ்லாமியர்களின் கடைகளை அடைக்க சொல்லியும், கோஷங்களை எழுப்பியும் பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். கடைகள் மீது கல்வீச்சில் ஈடுபட்ட காட்சிகள் ஊடகங்களிலும் ஆதாரத்துடன் வெளியாகின.
இந்த சம்பவத்திற்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசன் அவரது கண்டனத்தை தெரிவித்திருந்தார். மேலும், "கலவர ஸ்பெசலிஸ்ட்டுகளை நாம் ஒற்றுமையால் முறியடிப்போம்" என இந்தச் சம்பவம் குறித்து அவர் ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில், கலவரக்காரர்கள் மிரட்டிய வி.எம் காலனியகம் என்னும் செருப்புக் கடைக்கு நேரில் சென்று கடைக்காரரைச் சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார் கமல்ஹாசன். அந்தக் கடையில் தனக்கு காலனிகளும் வாங்கிக்கொண்டார்.

கமல்ஹாசனின், இந்த செயல் அங்குள்ள வணிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அவர்கள் ஒன்றுதிரண்டு கமல்ஹாசனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
அவர்களிடம் பேசிய கமல்ஹாசன், இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.