பாஜகவினர் பேரணியில் கல்வீச்சு..! வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் மனு

கோவை: இன்று கோவையில் நடைபெற்ற பாஜகவினர் பேரணியில் கல் வீசி இஸ்லாமியர்கள் கடைகளை தாக்கியுள்ளதால், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.


கோவை: இன்று கோவையில் நடைபெற்ற பாஜகவினர் பேரணியில் கல் வீசி இஸ்லாமியர்கள் கடைகளை தாக்கியுள்ளதால், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக, செயலாளர், ராமகிருட்டிணன், கூறுகையில்: உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர், வானதி சீனிவாசனை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்தார். அதற்கு, முன்னதாக புலியகுளத்தில் இருந்து பாஜக வினர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக தேர்நிலை திடலுக்கு வந்தனர். அப்போது, பெரியகடை வீதி சிக்னல் அருகே வரும் போது பாஜகவினர் முஸ்லிம் இளைஞர்களை பார்த்து கோஷம் எழுப்பியுள்ளனர். பதிலுக்கு அவர்களும் கோசம் எழுப்பியதால் அங்கு வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, தள்ளு முள்ளு ஏற்பட்டு பாஜகவினர் இஸ்லாமியர்கள் கடை மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையான அனுமதி வாங்காமல் பேரணி நடத்தியது, தொடர்பாக காவல் துறை வழக்கு பதிவு செய்ய இருக்கின்றனர். இந்நிலையில், தாக்குதல் நடத்திய பாஜகவினர் மற்றும் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி நாகராஜனிடம் புகார் அளித்தனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...