கோவை; பிரதமர் மோடி தாராபுரத்தில் நான்காம் தரமாக பேசினாலும், பதிலுக்கு ஐந்தாம் தரமாக நான் பேச மாட்டேன். ஏனெனில் நான் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெயராம கிருஷ்ணன், உடுமலை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தென்னரசு, வால்பாறை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோருக்கு ஆதரவாக மடத்துக்குளத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்
பரப்புரைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
“இந்த மாவட்டத்தின் அமைச்சராக இருக்கும் உடுமலை ராதாகிருஷ்ணன் கேபிள் டிவி வாரியத் தலைவராக இருக்கிறார். அவர் எந்த நலத்திட்டங்களையும் தொகுதியில் செயல்படுத்தவில்லை.

அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பான தமிழகத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளில் நமது கூட்டணி வெற்றி பெறும் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அதனை மீறி நாம் களத்தில் பணியாற்ற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்பியும் தன் கட்சியின் போட்டோவை லெட்டர் பேடில் போடாமல் பிரதமர் மோடியின் படத்தை போட்டுள்ளார்.
சமீபத்தில் பிரதமர் மோடி தாராபுரம் வந்தார். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முதன்மையானவர் என கருதப்படும் மோடி தாராபுரத்தில் நான்காம் தரமாக பேசுகிறார். நாம் அதை மீறி 5 ஆம் தரமாக பேசலாம். ஆனால் நான் அப்படி பேச கூடாது ஏனென்றால் நான் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் மகன்.

உடுமலை விவசாயிகள் வளம் பெற ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்றித் தருவேன் மடத்துக்குளம் விவசாயிகளின் நீண்ட நாள் கனவான அப்பர் அமராவதி திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கரும்பு மற்றும் நெல்லுக்கு கூடுதலாக ஆதார விலை வழங்கப்படும். இங்கு தக்காளி அதிகம் பயிரிடப்படுவதால் விளையும் தக்காளிகள் வீணாகாமல் தடுக்க தக்காளி சாஸ் தொழிற்சாலை உருவாக்கப்படும். உ.பி முதலமைச்சர் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார். ஆனால் உத்தரபிரதேசத்தில் 59000 பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.