மு.க.ஸ்டாலின் முதல்வரான பின்னர் நீட் தேர்வு ரத்து என தயாநிதிமாறன் உறுதி!

திருப்பூர்: மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர், நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உறுதி தெரிவித்தார்.


திருப்பூர்: மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்றபின்னர், நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உறுதி தெரிவித்தார்.

திருப்பூர் தெற்கு தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் நொய்யல் வீதியில்பரப்புரையில் ஈடுபட்டார்.

பரப்புரையின்போது மக்கள் மத்தியில் தயாநிதி மாறன் பேசியதாவது;



“நீட் நுழைவுத் தேர்வு காரணமாக மருத்துவக் கல்வி படிக்க வேண்டும் என்ற உங்கள் குழந்தைகளின் விருப்பமும் கனவும் பறிபோய் விட்டது.



தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நீட் தேர்வு ரத்து செய்வதற்கான நடவடிக்கையை கண்டிப்பாக மேற்கொள்வார். புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் நம் பிள்ளைகளின் எதிர்கால பட்டப்படிப்பை கேள்விக்குள்ளாக்கும்சூழலை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலை மாற திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.” இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...