தொண்டாமுத்தூர் தொகுதியில் Gpay மூலம் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக, திமுக குற்றச்சாட்டு..!

கோவை: வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பணம், பரிசுப் பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.


கோவை: வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பணம், பரிசுப் பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இருப்பினும் பணப்பட்டுவாடாவை நவீன முறையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் டீம், ஜிபே (G-Pay) மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்படுவதாக தொண்டாமுத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.

அதற்கேற்ப, இன்று தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தெலுங்குபாளையம் பகுதியில் வசிக்கும் மக்களிடம் அவர்களின் புகைப்படம், போன் நம்பர், மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட தகவல்களை பெற முயற்சி செய்த நபர்களை பிடித்து போலீசாரிடம், திமுகவினர் ஒப்படைத்துள்ளனர்.



அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பேப்பரில், பெண்கள் மற்றும் ஆண்களின் தொலைபேசி எண்கள் காணமுடிகிறது. தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல் துறையினர் அங்கு வந்ததால், அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.

இது சம்பந்தபட்ட வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள கார்த்திகேய சிவசேனாபதி, தேர்தல் ஆணையம் அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...