கோவை: உதய சூரியன் மட்டுமே தன் வாழ்வின் அடையாளம் என கோவை வடக்கு திமுக வேட்பாளர் வ.ம. சண்முகசுந்தரம் உருக்கமாகப் பேசியுள்ளார்.

கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வடவள்ளி வ.ம. சண்முகசுந்தரம் வடவள்ளி பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து திருவள்ளுவர் நகர், பி.என்.ஆர். நகர், உள்ளிட்ட 16 -வது வார்டு பகுதியில் தீவிர வாக்கு சேகரித்தார்.
அப்போது மக்கள் மத்தியில் வ.ம.சண்முகசுந்தரம் பேசியதாவது;
“ஒருவர் சொல்லிக் கொடுத்து என் பெயர் தெரிய வேண்டியது இல்லை. உதயசூரியன் சின்னத்தில் நான் போட்டியிடுகின்றேன். சூரியனை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது.
மாதாமாதம் வாங்கும் பேட்டா பணத்திற்காக சிலர் எதை எதையோ பேசி வருகிறார்கள். எனது பரம்பரை சொத்து மதிப்பு என்ன என்று தேர்தல் அலுவலகத்தில் கொடுத்துள்ளேன். கடந்த நான்கு வருடத்தில் திடீர் பணக்காரன் ஆனவன் நான் அல்ல. வடவள்ளியில் ஐந்து ஆண்டுகளில் ஐம்பது ஆண்டுகாலம் வளர்ச்சியை கொடுத்துள்ளேன் என்று பேசி வருகின்றனர். உங்களது ஐந்து தலைமுறைக்கு மட்டும் சொத்து சேர்த்து வைத்துள்ளீர்கள்.
எனவே இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இந்த மண்ணின் மைந்தனான எனக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். என் வாழ்நாளின் அடையாளம் உதயசூரியன் சின்னம் மட்டும்தான்.” இவ்வாறு வ.ம.சண்முக சுந்தரம் பேசினார்.