கோவை: கோவை பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு தொகுதி வேட்பாளராக களம் இறங்கிவுள்ள வானதி சீனிவாசன் குறித்து அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது, என்று அவரது கணவர் வழக்கறிஞர், சீனிவாசன் கோவை காவல் துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- நான் சென்னையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறேன். என்னுடைய மனைவி பாரதிய ஜனதா சார்பாக கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த சூழ்நிலையில், பா.ஜ.க,விற்கு வெற்றிவாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதை முறியடிக்கும் நோக்கத்தோடு ஒரு சிலர் முகநூலில் அவதூறு வீடியோவை பரப்பி வருகின்றனர்.
என்னையும் எனது மனைவியையும், என் மனைவியின் உடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சித்தரித்து வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். ஆதலால், தேர்தல் நேரத்தில் இதுபோல அவதூறு வீடியோ வெளியிட்டவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளார்.