நீலகிரி: குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான சிறப்பு பயிற்சிகள் நிறைவடைந்ததை அடுத்து அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் 141 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முதன்முறையாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

141 முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் 6 வார காலம் மேம்படுத்தப்பட்ட ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவுற்றதை அடுத்து அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கான பாராட்டுவிழா இன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தின் தலைவர் கமாடண்ட் ராஜேஷ்வர்சிங் பயிற்சி முடித்த முன்னாள் ராணுவத்தினருக்கு சத்திய பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பிரிகேடியர் ராணுவ வீரர்களுக்கு தரமான பயிற்சி அளிக்கும் மெட்ராஸ் ரெஜிமென்ட் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் கடின பயிற்சியினை வெகுவாக பாராட்டினர்.