உதகை; உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி தமிழ் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாராம் சூட்டினார்.

உதகை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று உதகை வந்தார். கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் உதகை வந்த அவர் கமர்சியல் சாலை முதல் பரப்புரை நடைப்பெறும் இடம் வரை பரப்புரை வாகனத்தில் வந்தார்.
இதன் பின்னர் ஏடிசி பகுதியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது;
“தமிழ் மொழி மிகப் பழமையான மொழி, உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி, தமிழ் மொழி தான். மத்திய அரசில் தற்போது நல்ல ஆட்சி நடைப்பெற்று வருகிறது. தமிழகம் வளர்ச்சி பெற வேண்டிய மாநிலம். எனவே தமிழகத்தில் பழனிசாமி ஆட்சி அமைய வேண்டும். கொரோனாகாலகட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டார் என உலக தலைவர்கள் பாராட்டியுள்ளனர். கொரோனா தொடர்பான பல உபகரணங்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்திய விஞ்ஞானிகள் கொரோனாவுக்கு புதிய தடுப்பூசி கண்டுபிடித்ததன் மூலம் 72 நாட்டுகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுள்ளன. எனவே, நமது விஞ்ஞானிகளைப் பாராட்டி கரங்களை தட்டுங்கள். திமுகவை சேர்ந்தஆ.ராசா எடப்பாடி பழனிசாமியின் தாயை பற்றி விமர்சித்ததை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக முதல்வரின் தாயை பற்றி விமர்சித்தது தமிழக பெண்களை விமர்சிப்பதுக்கு ஒப்பாகும்.
தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்க பல திட்டங்களை கொண்டுவரவுள்ளோம். புதிய திட்டங்கள் வாயிலாக 50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தமிழகத்தில் தேர்தல் முடிந்த பின் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கொடுக்கப்படும்.
விவசாயத்தை மேம்படுத்த 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் காரணமாக விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுவது போல மீனவர்களுக்கும் வருடத்துக்கு ரூ.6000 வழங்கப்படும். இலங்கைக்கு சென்ற முதல் பிரதமர் மோடி. இலங்கை போரில் வீடு இழந்தவர்களுக்கு 27 ஆயிரம் வீடுகள் கட்ட இந்தியா உதவி செய்தது. உலகின் மிகசிறந்த ராணுவங்களில் ஒன்றாக இந்திய ராணுவம் திகழ்கிறது. இந்தியா-சீனா எல்லையில் இந்தியாவின் ஒரு அங்குலம் நிலம் கூட சீனாவுக்கு விட்டுக்கொடுக்கப்பட மாட்டாது.
நீலகிரியில் வாழும் படுகர் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். காலனிகளில் உள்ள வீடுகள் கான்கீரிட் வீடுகளாக மாற்றப்படும். தேயிலைக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ.30 நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உதகையை உலக தரவாய்ந்த சுற்றுலா தலமாக மாற்றவும், உதகையில் ஐ.டி பார்க் துவங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.