அம்மா எங்களுக்கு மம்மி.. மோடி எங்களுக்கு டாடி என்கிறார் அமைச்சர்.. இதை நாம் சொன்னால் சர்ச்சை பேச்சு - தயாநிதி மாறன்!

கோவை: கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து, குறிச்சி பிரிவு இட்டேரி பகுதியில் தயாநிதி மாறன் பிரச்சாரம் செய்தார்.



கோவை: கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து, குறிச்சி பிரிவு இட்டேரி பகுதியில் தயாநிதி மாறன் பிரச்சாரம் செய்தார்.

பாச உறவு

வெறுப்பு அரசியல் செய்து இந்துக்களின் வாக்குகளைப் பெற்று தமிழ்நாட்டில் காலூன்ற பாஜக நினைப்பதாக அவர் குறிப்பிட்டார். அதே நேரம் தமிழகத்தில் உள்ள இந்துக்கள், முஸ்லிம்கள் இடையேயான பாச உறவை என்றும் பிரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

குடியுரிமை சட்ட திருத்தம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்தது அதிமுக என்று குற்றம்சாட்டிய அவர், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்போம் என முதல்வர் பழனிசாமி சொல்கிறார். அதிமுக இரட்டை நிலைப்பாட்டுக்கு இது ஒரு உதாரணம் என்றார்.

நீட் தேர்வு

நீட் தேர்வு சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்த அதிமுக, தற்போது தேர்தலுக்காக பொய் சொல்கிறது. ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நீட் தேர்வு பறிக்கிறது. இதை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்பிறகு, தமிழகத்தில் 14 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நர்சிங் மற்றும், கலை, அறிவியல் கல்லூரியில் சேரவும் தகுதித் தேர்வு அவசியம் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

டாடி

தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டுமானால், மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். 'அம்மா' எங்களுக்கு மம்மி, மோடி எங்கள் டாடி என்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இதை நாம் சொன்னால் கத்துவார்கள். இவ்வாறு தயாநிதிமாறன் பேசினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...