கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய பாரதிய ஜனதாவின் உடைய மகளிர் அணி தலைவியும் வேட்பாளருமான வானதி சீனிவாசன் ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சற்று முன்பு கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.

அங்கு பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக மேளதாளங்கள் முழங்க பாரம்பரிய முறைப்படி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து மோட்டார்சைக்கிள் மூலமாக ஊர்வலமாக புலியகுளத்திலுள்ள முந்தி விநாயகர் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கு பாரதிய ஜனதா சார்பாக கோயில் நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து பரிவட்டம் கட்டி வரவேற்பளித்தனர்.

இதையடுத்து, அங்கு விநாயகரை தரிசனம் செய்துவிட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்த வாகனத்தில் ஏறி ஊர்வலமாக பயணித்து வானதி சீனிவாசனுக்கு வாக்கு சேகரித்தார்.

ஊர்வலம் அரசு மருத்துவமனை, திருச்சி சாலை, டவுன்ஹால், வழியாக பிரச்சார மேடையான தேர் முட்டியை அடைந்தது. வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.