கோவை: கோவை ஈச்சனாரி கோயில் கழிவறையில் ஆண் சிசு சடலத்தை வீசி சென்ற நபரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ஈச்சனாரி கோவில் கழிவறையில் நேற்று மாலை ஆண் சிசு சடலம் கிடப்பதாக தெரிய வந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் ரத்தக் கசிவுடன் இறந்துகிடந்த சிசு கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், கர்ப்பிணி பெண் ஒருவர் கோவிலுக்கு வந்திருந்த போது பிரசவ வலி ஏற்பட்டு இருக்கலாம் எனவும் அவர் கழிவறைக்கு சென்றபோது குழந்தை இறந்த நிலையில் பிறந்திருக்கலாம் என்றும் அவர் இந்த விவரங்களை மறைத்து விட்டு யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து சென்று இருக்கலாம் என விசாரணை நடத்திய போலீசார் தெரிவித்தனர். இறந்து கிடந்தது ஆறு அல்லது ஏழு மாத சிசு என தெரியவந்தது. போதுமான வளர்ச்சியின்றி சிசு காணப்பட்டது.
இதனிடையே, கோவிலுக்கு வந்து சென்ற கர்ப்பிணி பெண்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்குள் இருக்கும் கழிவறையில் சிசு இறந்து கிடந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயில் வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.