'லிப் சர்வீஸ்' என்ற மநீம தலைவர் கமல்ஹாசன் குறித்த சர்ச்சை கருத்துக்கு வானதி சீனிவாசன் விளக்கம்!

கோவை: கடந்த வாரம் கோவை தெற்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரச்சாரம் மேற்கொண்டார்.


கோவை: கடந்த வாரம் கோவை தெற்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, வானதி சீனிவாசனுடன் விவாதத்திற்கு வருமாறு கமலுக்கு சவால் விடுத்தார் ஸ்மிருதி இராணி. அதற்கு பதிலளித்த மக்கள் நீதி மையத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சி. கே. குமரவேல், வானதி சீனிவாசன் போன்ற 'துக்கடா' அரசியல்வாதியிடம் விவாதிக்க மக்கள் நீதி மையத்தின் மாணவரணி போதுமானது என்று காட்டமான கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மக்கள் நீதி மையத்தின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று கோவை சொர்ணாம்பிகை லே-அவுட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட வானதி சீனிவாசன், 'லிப் சர்வீஸ்' செய்பவர் கமல். லிப் சர்வீஸ் என்றால் இரண்டு அர்த்தங்கள் வரும். ஒன்று உதட்டு அளவில் சேவை செய்வது. இன்னொன்று உதட்டுக்கு மட்டும் சேவை செய்வது. இதை மட்டுமே செய்யும் நீங்கள் என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்லலாமா? என்று அவர் பேசியது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு விவாதத்திற்கு வருமாறு சவால் விட்டபோது என்னை ஒரு ‘துக்கடா’ அரசியல்வாதி என்று மக்கள் நீதி மய்யம் அழைத்ததற்குப் பதிலளிக்கும் விதமாக நான் கூறிய கருத்து தான் இது.

நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டுள்ளேன், ஆனாலும் நான் ஒரு ‘துக்கடா’ அரசியல்வாதி என்று முத்திரை குத்தப்பட்டேன் என்றும் வெளிப்படையான விவாதத்திற்கு நான் தயார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...