உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை வருகை. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

கோவை: இன்று மதியம் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடக் கூடிய பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசனை ஆதரித்து, தேர்முட்டி பகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக கோவை வந்துள்ளார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



கோவை: இன்று மதியம் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடக் கூடிய பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசனை ஆதரித்து, தேர்முட்டி பகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக கோவை வந்துள்ளார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



தொடர்ந்து, பாஜகவினர் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக பிரசார மேடைக்கு வர உள்ளனர். அந்த பேரணியில், யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு உள்ளதால், கோவை டவுன் ஹால், மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.



அந்த பகுதியில் உள்ள கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிட்டு இருந்தனர். அந்த பகுதியில் உள்ள கடைகள், சாலையோரங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மூலமாக வெடிகுண்டு சோதனை செய்யப்பட்டது. 



இந்த நிலையில், கோவை டவுன்ஹால் பகுதியில் யோகி ஆதித்யநாத்க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இஸ்லாமிய அமைப்பினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஏற்பட்டு அவர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.



யோகி ஆதித்யநாத் வருகையை ஒட்டி கோவையின் உடைய முக்கிய வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...