பொள்ளாச்சி அருகே பாதுகாப்பு விதிமுறை மீறல் காரணமாக 2 மருத்துவ ஆய்வகங்களுக்கு சீல் வைப்பு - நகராட்சி ஆணையர் நடவடிக்கை!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 2 மருத்துவ ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 2 மருத்துவ ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

பொள்ளாச்சி மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மருத்துவ ஆய்வகங்களை நகர் நல அலுவலர் ராம்குமார், தெற்கு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், கொரோனா தடுப்பு டாக்டர் விஜயகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது, நியூ ஸ்கீம் ரோடு மற்றும் காமராஜர் சாலையில் செயல்பட்டு வந்த இரண்டு மருத்துவ ஆய்வகங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதது தெரியவந்தது.

இதையடுத்து அந்த ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு தலா 50,000 அபராதம் விதிக்கப்பட்டது. மத்திய மாநில அரசுகளின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் ஆஸ்பத்திரிகள் மருந்தகங்கள் ஆய்வகங்கள் மீது விதிமுறை மீறலுக்கு ஏற்றார்போல அபராதம் விதிக்கப்படும் என்றார்.

மேலும், நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தற்போது கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி நகரிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. பொது இடங்களிலும் பணிபுரியும் இடங்களிலும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தடுப்பு முறைகளை அனைவரும் பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...