லிப் சர்வீஸ் மட்டுமே செய்து வருபவர் கமல்ஹாசன் - வானதி ஶ்ரீனிவாசன்!

கோவை: கடந்த வாரம் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.



கோவை: கடந்த வாரம் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, பாஜக வேட்பாளர் வானதியை எதிர்த்துப் போட்டியிடும் கமல்ஹாசன், அவருடன் மக்கள் பிரச்சினைகள் குறித்து நேரடியாக விவாதத்திற்கு வருமாறு ஸ்மிருதி இராணி சவால் விடுத்தார்.

அதைத்தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் பதில் அறிக்கையை அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் குமரவேல் வெளியிட்டார். அதில் கமல்ஹாசன் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் விவாதிக்க விரும்புவதாகவும், வானதி சீனிவாசன் போன்ற "துக்கடா" அரசியல்வாதியுடன் விவாதிக்க மக்கள் நீதி மய்யத்தின் மாணவரணியே போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வானதி சீனிவாசன் தனது எதிர்ப்பை காணொளி மூலம் பதிவு செய்து வெளியிட்டார். சாமானிய குடும்ப பின்னணியில் இருந்து பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்களுக்கு மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்தவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா என்று கேள்வி எழுப்பினார்?

பின்னர், நேற்று இரவு சொர்ணாம்பிகை லே-அவுட் 51-வது வார்டு பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது அவர் பேசியதாவது:

இந்தியாவிலேயே மிகப் பெரிய கட்சியான எங்கள் கட்சியின் பிரதமர் உங்களுடன் விவாதிக்க வேண்டுமா? என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்கின்றனர் மக்கள் நீதி மய்யம் கட்சியினர். அந்த நடிகரை பார்த்து கேட்கிறேன். இதுவரை நீங்கள் லிப் சர்வீஸ் மட்டுமே செய்து வருபவர்.

லிப் சர்வீஸ் என்றால் இரண்டு அர்த்தங்கள் வரும். ஒன்று உதட்டு அளவில் சேவை செய்வது. இன்னொன்று உதட்டுக்கு மட்டும் சேவை செய்வது. இதை மட்டுமே செய்யும் நீங்கள் என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்லலாமா? மக்கள் தங்களது வாக்குகளின் மூலம் கமல்ஹாசனுக்கு பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...