திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தேர்தல் பரப்புரை..!

திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ரவியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், அனுப்பர்பாளையம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.


திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ரவியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், அனுப்பர்பாளையம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பாஜக கட்சிக்கு அடிமையாக உள்ள அரசு வேண்டுமா..? என்ற கேள்விக்கான பதில் சொல்லக்கூடிய தேர்தலாக இது அமைந்திருப்பதாகவும், அடிமை அரசிடம் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய மகத்தான கடமை நம்மிடத்தில் உள்ளதாகவும் பேசினார்.



மேலும், பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட போது, மக்களை பற்றி சிறிதளவும் சிந்திக்காமல் அதிமுக எம்பிக்கள் அதற்கு ஆதரவளித்ததாக, குற்றம் சாட்டினார்.



தற்போது, பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட்டுக்கு விற்பது குறித்து கேள்வி எழுப்பாமல் அதிமுக அமைதி காத்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் அதிமுக, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சின் பினாமியாக இருப்பதாகவும், அதிமுகவிற்கு போடும் வாக்குகள் பாஜகவிற்கு தான் சாதகம் எனவும், மதவாத பிரிவினைவாத சக்திகளை தமிழ்நாட்டில் அனுமதிக்காமல் தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை மதசார்பின்மையை காப்பாற்ற கடுமையாக உழைத்து திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும், எனவும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...