வால்பாறை சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமியை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிர பிரச்சாரம்..!

வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறை சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமியை ஆதரித்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று வால்பாறை நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறை சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமியை ஆதரித்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று வால்பாறை நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அதைத்தொடர்ந்து, வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பேசியபோது, முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நாட்டு மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினார், அதேபோல, அவரின் வழியில் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் எடப்பாடியார் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்திற்கு பல்வேறு விருதுகளையும் குவித்து நாட்டு மக்களின் தேவைகளை கேட்டறிந்து, தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி தமிழக மக்களின் மனதில் நீங்காத நம்பிக்கையை பெற்றுள்ளார்கள். அதேபோல, நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றவுடன் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ஆறு சிலிண்டர், மாதம் ரூபாய் 1,500, வாஷிங்மிஷின், முதியோர்கள் உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாய் அதோடு வால்பாறைப்பகுதியில் தோட்டத்தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு, இளைஞர்களுக்கு மாற்றுத்தொழில் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார்கள்.



தமிழகத்தில் தொடர்ந்து நல்லாட்சியும் தமிழக மக்களின் அரசாய் நிகழ்த்திட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து கழக வேட்பாளர் அமுல் கந்தசாமியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது, நகரச்செயலாளர் ம. மயில் கணேசன்,பேரவை மாவட்ட செயலாளர் விஜயகுமார், பாசறை மாவட்ட செயலாளர் சாந்தலிங்ககுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகளும், கூட்டணி கட்சி காளான் பா.ஜ.க, த.மா.க உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...