கோவை: கொரோனா ஊரடங்கு காலத்தில் திமுகவினர்தான் மக்களுக்கு உதவி செய்தனர் என்று திமுக வேட்பாளர் வ.ம.சண்முக சுந்தரம் தெரிவித்தார்.
கோவை: கொரோனா ஊரடங்கு காலத்தில் திமுகவினர்தான் மக்களுக்கு உதவி செய்தனர் என்று திமுக வேட்பாளர் வ.ம.சண்முக சுந்தரம் தெரிவித்தார்.
கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வடவள்ளி வ.ம. சண்முகசுந்தரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
கோவில் மேடு பகுதியில் சாஸ்திரி வீதி, கலா மன்றம், மதுரை கோனார் வீதி, நல்லம்மாள் வீதி, திலகர் வீதி, பாரதியார் வீதிகளில் பரப்புரை மேற்கொண்ட அவர், தொடர்ந்து தடாகம் வீதி வழியாக காந்திநகர் வரை பரப்புரை மேற்கொண்டார்.
சண்முகசுந்தரத்துடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடன் வந்தனர். பரப்புரையின் போது அவருக்கு பெண்கள் மலர்தூவி ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்
மக்கள் மத்தியில் சண்முக சுந்தரம் பேசியதாவது;
“கடந்த 10 ஆண்டு காலம் நடந்த கொடுங்கோல் ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட முன் வந்து விட்டனர். வேலாண்டிபாளையம் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கபாடுபடுவேன்.
சட்டமன்ற உறுப்பினர் ஆனவுடன் தொகுதியின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்பேன். கொரோனா காலத்தில் ஆளுங்கட்சி தனது கட்சி ஆட்களுக்கு மட்டுமே பொருட்களை கொடுத்து உதவி செய்தது.
ஆனால் திமுகதான் கட்சி பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பொருட்கள், உணவு கொடுத்தது. தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி அமைய வாக்களிக்க வேண்டும்.” இவ்வாறு வ.ம.சண்முகசுந்தரம் பேசினார்.