கோவையில் ஒரே நாளில் ரூ.16.40 லட்சம் பறிமுதல்; தேர்தல்பறக்கும் படையினர் அதிரடி

கோவை: கோவையில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் இன்று ஒரே நாளில் ரூ.16.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் இன்று ஒரே நாளில் ரூ.16.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மேட்டுப்பாளையத்தில் ரூ.1.50 லட்சம், கவுண்டம்பாளையத்தில் 97 ஆயிரம், தொண்டாமுத்தூரில் ரூ.1.03 லட்சமும் இன்று பறிமுதல் செய்தனர்.

இதேபோல சிங்காநல்லூரில் ரூ.1 லட்சம், கிணத்துக்கடவு பகுதியில் ரூ. 3.98 லட்சம், வால்பாறையில் ரூ.2.25 லட்சம், பொள்ளாச்சியில் ரூ.5.56 லட்சத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ. 53.09 கோடி மதிப்பில் பணம், தங்க நகைகள், மதுபாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் ரூ.16.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...