கோவை: பொதுமக்களுக்கு இளநீர் வெட்டிக் கொடுத்து நூதன முறையில் கவுண்டம்பாளையம் திமுக வேட்பாளர் பையா என்ற ஆர்.கிருஷ்ணன் பரப்புரை மேற்கொண்டார்.
கோவை: பொதுமக்களுக்கு இளநீர் வெட்டிக் கொடுத்து நூதன முறையில் கவுண்டம்பாளையம் திமுக வேட்பாளர் பையா என்ற ஆர்.கிருஷ்ணன் பரப்புரை மேற்கொண்டார்.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
தொகுதிக்கு உட்பட்ட காளப்பட்டி, வழியாம்பாளையம், வீரியம்பாளையம், காப்பிக்கடை, காளப்பட்டி, நேரு நகர், பாலாஜி நகர், கருப்பராயன்பாளையம், அருளானந்தம் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று அவர் தீவிரப் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது திமுக வேட்பாளர் பையா (எ) ஆர்.கிருஷ்ணன் பேசியதாவது;
நான் கடந்த 2001 முதல் 2011 வரை காளப்பட்டி பேரூராட்சி மன்றத் தலைவராக இருக்கும் போது தரமான தார்சாலை, குடிநீர் விநியோகம் போன்ற திட்டங்களை செய்தேன்.
மின் வசதி மற்றும் தெரு விளக்குகள் அமைத்தல் போன்ற எண்ணற்ற மக்கள் பணிகளைச் செய்தேன். இப்போது நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்தால் பேரூராட்சி மன்ற தலைவராக இருந்த போது திறம்பட செயல்பட்டதைப் போல கவுண்டம்பாளையம் தொகுதி முழுவதும் மக்கள் பணிகள் செய்வேன். இவ்வாறு பையா (எ) ஆர். கிருஷ்ணன் பேசினார்.
பரப்புரையின்போது பொதுமக்களுக்கு இளநீர் வெட்டிக் கொடுத்து நூதன முறையில் கவுண்டம்பாளையம் திமுக வேட்பாளர் பையா என்ற ஆர்.கிருஷ்ணன் பரப்புரை மேற்கொண்டார்.
இந்தப் பரப்புரையின்போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், நிர்வாகிகளும் உடன் வந்தனர்.