பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தி சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படுத்த திமுகவினர் திட்டமிடுகிறார்கள் என்று பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டி உள்ளார்.

பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளரும் சட்டபேரவை துணை தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
“பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக ஆதாரமில்லாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பரப்புரையின்போது பேசி வருகின்றனர்.
பொள்ளாச்சியில் பரப்பபுரை மேற்கொண்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், பாலியல் வழக்கில் என்னை உட்படுத்திப் பேசி உள்ளார். எனவே அவர் மீது வழக்குத்தொடர உள்ளேன்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். பொள்ளாச்சி திமுக வேட்பாளர், இந்த பாலியல் வழக்கை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தி வருகிறார்.
பிரசாந்த் கிஷோரின் இரவல் மூளையைப் பயன்படுத்தி சபரிமாலா என்ற பெண்ணை பணம் கொடுத்து அழைத்து வந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தி திமுகவினர் சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர்.” இவ்வாறு பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.