பெண் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு இல்லை; சபரிமாலா குற்றச்சாட்டு

பொள்ளாச்சி: தமிழகத்தில் பெண் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் கல்லூரி மாணவிகளுக்கு எப்படி பாதுகாப்பு இருக்க முடியும் என்று சமூக ஆர்வலர் சபரிமாலா கேள்வி எழுப்பி உள்ளார்.


பொள்ளாச்சி; தமிழகத்தில் பெண் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் கல்லூரி மாணவிகளுக்கு எப்படி பாதுகாப்பு இருக்க முடியும் என்று சமூக ஆர்வலர் சபரிமாலா கேள்வி எழுப்பி உள்ளார்.

பொள்ளாச்சி அருகே ஒக்கிலிபாளையம் கிராமத்தில் கடந்த 28ஆம் தேதி திமுக பரப்புரையின்போது அதிமுக -திமுக இடையே மோதல் மூண்டது. இதுதொடர்பாக இருதரப்பினர் மீதும் வடக்கிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் திமுக சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் சபரிமாலா இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது;

“பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல் மற்றொரு சம்பவம் நடக்கக் கூடாது என்பதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பரப்புரை நடத்தி வருகின்றேன். என் மீது தாக்குதல் நடத்தி அதிமுகவினர் அச்சுறுத்தி வருகின்றனர். இதேபோல் சாமானிய மக்களை அதிமுகவினர்எவ்வாறெல்லாம் விரட்டி இருப்பார்கள்?

காவல்துறை என்னிடம் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் எவ்வாறு வழக்கு பதிவு செய்து உள்ளனர் என்று தெரியவில்லை.பெண்கள் பாதுகாப்பு இயக்கம் நடத்திவரும் எனக்கே பாதுகாப்பு இல்லை என்றால் பொள்ளாச்சியில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு இருக்கும்?

மேலும் பெண் பிள்ளைகளைப் பெற்ற அதிமுகவினர் கடும் கோபத்தில் உள்ளனர். இதுபோன்று பொய் வழக்குகள் போட்டு ஆளும் கட்சியினர் அச்சுறுத்துவது கண்டு நான் பயப்படப் போவதில்லை.

பொள்ளாச்சி திமுக வேட்பாளர் வரதராஜன் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும் வைக்க முடியாத எதிர்க்கட்சியினர் செய்வதறியாது பொய் பிரச்சாரங்கள் செய்து, வழக்குகள் போடுகின்றனர்.

காவல் துறை கைது செய்யாத அதிமுக பிரமுகர்களை சிபிஐ கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட ஆளும் கட்சியினர் யாரின் பாதுகாப்பில் இருந்துள்ளார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. எனவே இது குறித்து பிரச்சாரம் செய்யும் என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படவேண்டும். இவ்வாறு சமூக ஆர்வலர் சபரிமாலா கூறினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...