நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரிமோதி இரு லாரிகளும் வீட்டுக்குள் புகுந்தன; 6 பேர் காயம்

கோவை: சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக மற்றொரு லாரி மோதியதில் இரு லாரிகளும் சாலையோரம் இருந்த வீட்டுக்குள் புகுந்ததில் 6 பேர் காயமுற்றனர்.


கோவை: சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக மற்றொரு லாரி மோதியதில் இரு லாரிகளும் சாலையோரம் இருந்த வீட்டுக்குள் புகுந்ததில் 6 பேர் காயமுற்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் இன்று காலை ஊட்டி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்றின் டயர் வெடித்தது. இதனால் அந்த லாரி சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.



இந்நிலையில் காலை 4 மணி அளவில் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த லாரி, நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.



மோதிய வேகத்தில் 2 லாரிகளும் சாலையின் ஓரத்திலிருந்த சாந்தாமணி என்பவரது வீட்டின் மேற்கூரை மீது பாய்ந்தன. அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சாந்தாமணி அவரது பேரன் ரஞ்சித் குமார் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.

ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த லாரியில் பயணம் செய்த கூடலூர் சேரம்பாடியைச் சேர்ந்த செல்வராஜ் (52) அவரது மனைவி விஜயலட்சுமி (45) இவர்களது மகன் கார்த்திக் (28) மகள் கவிதா (19) உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் இரண்டு பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...