கோவை: சிட்னி நகர மாடலில் கோவை பேருந்து நிலையத்தின் முகப்பு மிக நவீனமான முறையில் உருவாக்கப்பட்டு வருவதாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.168 கோடி செலவில் பேருந்து நிலையத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

2 லட்சம் சதுரடி பரப்பில் பேருந்துகள் நிறுத்துமிடம், 300 பேருந்துகள் நிறுத்தும் வகையிலான வரிசை அடுக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவு பேருந்துகள் மற்றும் நகரப் பேருந்துகள் நிறுத்துவதற்குத் தனித்தனியாக இடம் ஒதுக்கப்படுகிறது.
சிறப்பு வசதிகளுடன் கூடிய வாகனப் பணிமனை, பேருந்து பராமரிப்பு கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. டீசல் வாகனங்களுக்குப் பதிலாக பேட்டரியில் இயங்கும் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. எனவே, பேட்டரி சார்ஜ் செய்யும் வகையிலான தனி பணிமனை, சார்ஜிங் பாயிண்ட் போன்றவையும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
கோவை, திருப்பூர் மாவட்ட போக்குவரத்து கழக அலுவலக தலைமை அலுவலகக் கட்டடம், பயணிகள் காத்திருப்பு கூடம், பேருந்துகள் இயக்கம் தொடர்பான விவரங்கள் அறிவிப்பு கூடம், 50 வணிக கட்டடங்கள் கட்டும் பணிகள் ஆகியவையும் நடைபெற்று வருகின்றன.

பேருந்து நிலையத்தின் முகப்பு பகுதியில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருப்பதுபோல் தாமரை இதழ் வடிவில் 15 மீட்டர் உயரத்தில் நுழைவு பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முகப்பு வளாகம் 170 மீட்டர் அளவில் இறக்கை வடிவில் வடிவமைக்கப்படவுள்ளது. இந்த முகப்பு வளாகம் அமைக்கும் பணியை 3 மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பேருந்து நிறுத்துமிடத்தின் வளாகத்தின் கூரைக்கு அல்கோ பேனல் பயன்படுத்தப்படுகிறது. காற்று, மழை, வெப்பம் ஆகியவற்றை தாங்கும் வகையில் கூரை அமைக்கப்படுகிறது.
பேருந்துநிலையத்தின் 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் சில மாதங்களில் முடிக்கப்பட்டு, வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் இருந்து கோவை நகர், புறநகர் பேருந்துகள்அனைத்தையும் இயக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கேற்ப இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் ரோடு பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகள் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவர அவதிப்படுகின்றனர். வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகளின் அலைக்கழிப்பு தவிர்க்கப்படும்.

சென்னை கோயம்பேடுபோல தமிழகத்தின் மிகப் பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்ற பெருமையும் கோவை வெள்ளலூர் பேருந்து நிலையத்துக்குக் கிடைக்கும் என மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.