எதிர்கால தலைமுறையைப் பாதுகாப்பதற்கான தேர்தல்: தயாநிதி மாறன் பரப்புரை

நீலகிரி: சட்டப்பேரவைத் தேர்தல் நமக்கான தேர்தல் அல்ல. நம் எதிர்கால தலைமுறையைப் பாதுகாப்பதற்கான தேர்தல் என முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தினார்.


நீலகிரி: சட்டப்பேரவைத் தேர்தல் நமக்கான தேர்தல் அல்ல. நம் எதிர்கால தலைமுறையைப் பாதுகாப்பதற்கான தேர்தல் என முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தினார்.



குன்னூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ராமசந்திரனை ஆதரித்து தயாநிதி மாறன் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது;



“இப்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் மத்திய அரசிடம் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துள்ளார். தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் அமைந்தவுடன் ஸ்டாலின்மகனாக இருந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்.

ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளதாக சொன்னது ஸ்டாலினோ, நானோ இல்லை. துணை முதல்வர் ஓபிஎஸ் தான். அதன்பிறகு ஆறுமுகம்சாமி விசாரணை கமிஷன் முன்பு ஒருமுறைக் கூட ஓ.பி.எஸ் ஆஜராக வில்லை.

ஜெயலலிதா சாவில் சந்தேகம் உள்ளதாக கூறியவர்கள் இன்று வாயை திறக்காமல் உள்ளார்கள். திமுக ஆட்சியமைத்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணம் என்பது தெரியவரும்.



இந்தியாவில் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என கூறி 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தது மக்களை திண்டாட செய்தது மத்திய அரசு. கொரோனா காலகட்டத்தில் தொலைக்காட்சி முன் தோன்றி அனைவரையும் கைதட்டசொல்லி சமூக இடைவெளியில்லாமல் கொரோனாவை பரப்பியதே பிரதமரின் சாதனை, மக்களின் காதில் பூ சுற்றுவதுபோல கொரோனாவை பற்றி பேசியும் கூட இன்று கொரோனா நம்மை விட்டு செல்லவில்லை.

கொரோனா காலத்திலும், பொங்கல் பண்டிகையின்போதும் தி மு.க கொடுத்த அழுத்தத்தினால்தான் அரசு பணம் கொடுத்தது. அடுத்து வரும் திமுக ஆட்சி காலத்தில் அனைவருக்கும் ரூ.4 ஆயிரம் கொடுப்பதாக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் நமக்கான தேர்தல் அல்ல. நம் எதிர்கால தலைமுறையைப் பாதுகாப்பதற்கான தேர்தல். தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டு வந்து நமது தமிழக மாணவர்களை நசுக்கியது இந்த அரசு. தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்ததால் தான் இந்த நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.” இவ்வாறு தயாநிதி மாறன் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...