கோவை: இலங்கைக்கு ஆதரவாக ஐ நா தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்த மோடியின் வருகையை கண்டித்து கருப்பு கொடி காட்டி சாலை மறியலில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: இலங்கைக்கு ஆதரவாக ஐ நா தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்த மோடியின் வருகையை கண்டித்து கருப்பு கொடி காட்டி சாலை மறியலில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழீழத்தில் இனப்படுகொலை செய்த சிங்கள ராஜபக்சே மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி ஐ நா மனித உரிமை ஆணையத்தில் உலக நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தார்கள். இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன், ஜெர்மன் உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரித்தன.
ஆனால், இந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் மோடி தந்திரமாக ராஜ பக்சேவிற்கு ஆதரவாக வெளிநடப்பு செய்திருக்கிறார். இலங்கைக்கு ஆதரவளித்து தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கிறார்.
இலங்கையில் கொல்லப்பட்ட லடக்கண்கான தமிழர்கள் பெரும்பான்மையோர் இந்துக்கள் எனவும், முருகன், விநாயகர் கோவில் குண்டு வீசி தகர்க்கப்பட்ட போது இந்துக்களுக்காக மோடி குரல் கொடுக்கவில்லை என்றார். இதற்கு நியாயம் கேட்டுதான் கிறிஸ்துவ நாடுகள் தீர்மானம் கொண்டு வந்ததை பாஜக ஆதரிக்காமல், தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கிறது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன் தெரிவித்தார்.

தாராபுரத்தில் பாஜக தலைவர் முருகனை ஆதரித்து நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் மோடியை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கையில் மோடியே திரும்பி போ என்ற பதாகைகளை ஏந்தியவாறு பீளமேட்டில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழன விரோதி, மோடியே திரும்பிபோ, குஜராத்தில் இஸ்லாமியர்களை கொலை செய்த மோடியே திரும்பி போ, ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை ஆதரிக்காத மோடியே திரும்பி போ என மோடியை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.
இதனிடையே, காவல் துறைக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி 10 பெண்கள் உள்ளிட்ட 60 பேரை கைது செய்தனர்.
