பிரதமர் விழாவிற்குச் சென்ற அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பாதுகாப்பு காவலர்கள் வேன் விபத்து - 2 போலீசார் காயம்!

கோவை: பிரதமர் விழாவிற்குச் சென்ற அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பாதுகாப்பு காவலர்கள் வேன் விபத்து ஏற்பட்டதில் 2 போலீசார் காயமடைந்தனர்.


கோவை: பிரதமர் விழாவிற்குச் சென்ற அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பாதுகாப்பு காவலர்கள் வேன் விபத்து ஏற்பட்டதில் 2 போலீசார் காயமடைந்தனர்.

கோவையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்தும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் பாரதப் பிரதமர் மோடி வாக்கு சேகரித்துப் பேசவுள்ளார். அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவையிலிருந்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது, தாராபுரம் டோல்கேட் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது அமைச்சர் காருக்கு முன்னால் சென்ற பாதுகாப்பு போலீசாரின் வாகனம் திடீரென விபத்துக்குள்ளானது. அதில் 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அவருடைய காருக்கு வழிவிட்டு விழா மேடைக்கு அமைச்சரை பாதுகாப்போடு அழைத்துச் சென்றனர். காயம்பட்ட இரண்டு பாதுகாப்பு போலீசார்கள் சிகிச்சைக்காக கோவை கொண்டு வரப்பட்டன. அனைவரும் சிறு காயத்துடன் சிகிச்சையில் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல, சபாநாயகர் தனபால் சென்ற பாதுகாப்பு போலீசார் வாகனம் விபத்துக்குள்ளானதில் அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அவரையும் போலீஸ் பாதுகாப்போடு தாராபுரம் விழா மேடைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...