கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் வீடுகளில் சிகிச்சை பெற்று வரக்கூடிய கொரோனா நோயாளிகளுக்கு ஓட்டு அளிப்பதற்கு சுகாதாரத்துறை போதிய வசதிகளை செய்து தர வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை கொரோனா நோயாளிகள் ஓட்டுப்பதிவு செய்வதற்கு, தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி, சுகாதாரத்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று, வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் தபால் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கியது. ஆனால், கொரோனா தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சையில் இருப்பவர்கள், நேரடியாக சென்றால் மட்டுமே ஓட்டளிக்க முடியும். இவர்களிடம் இருந்து தொற்று பரவும் வாய்ப்புள்ளதால், பி.பி.இ., கவச உடையணிந்து சென்று, ஓட்டளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடைசி ஒரு மணி நேர ஓட்டுப்பதிவை, கொரோனா தொற்று பாதித்தவர்கள், பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த நேரத்தில், ஓட்டுச்சாவடியில் இருக்கும் பணியாளர்கள் அனைவரும், கவச உடையணிந்து பணியில் ஈடுபடுவர்.
கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், கொரோனா தொற்று பாதித்த நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு எங்கு ஓட்டு இருக்கிறது என்பதை அறிந்து, ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று ஓட்டளிக்க வைக்கும் திட்டத்தை செயல்படுத்த, சுகாதாரத்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.