அதிமுகவும் - பாஜகவும் இந்து - இஸ்லாமியர்களுக்கு இடையே வெறுப்பு அரசியலை உருவாக்கி வெற்றி பெற நினைக்கிறது - கோவையில் தயாநிதிமாறன் எம்பி குற்றச்சாட்டு

கோவை: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் எம்பி. கோவையில் பல்வேறு இடங்களில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். நெகமத்தில் பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர். வரதராஜன், கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து கிணத்துக்கடவு, சிட்கோ, ஆத்துபாலம் பகுதியிலும், தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர், கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து, செல்வபுரம், கரும்புகடை பகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



கோவை: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் எம்பி. கோவையில் பல்வேறு இடங்களில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். நெகமத்தில் பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர். வரதராஜன், கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து கிணத்துக்கடவு, சிட்கோ, ஆத்துபாலம் பகுதியிலும், தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர், கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து, செல்வபுரம், கரும்புகடை பகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, கோவை ஆத்துப்பாலம் பகுதியில் தயாநிதிமாறன் பேசுகையில்:-



கோவை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். வரும், ஏப்ரல் 6 ந்தேதி சிந்தாமல், சிதறாமல் உங்கள் வாக்குகளை உதயசூரியனுக்கு அளிக்க வேண்டும்.

சொந்த நாட்டிலேயே வஞ்சிக்கப்படுகின்ற இஸ்லாமியர்கள் என்ன தவறு செய்தார்கள்?இஸ்லாமியர்களுக்காக பேசுகின்றீர்களே என்கின்றனர். இஸ்லாமியர்களுடன் எப்போதும், மாமன் மச்சான் முறையில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். வெறுப்பு உணர்வை கொண்டு வந்து, இந்து, முஸ்லீம்களை பிரிக்க வேண்டும், அதன்மூலம் வெற்றி பெற வேண்டும். வெறுப்பு அரசியலை கொண்டு வந்தால் இந்துக்களின் ஓட்டுகளை பெற்று விடலாம் என்று எண்ணுகின்றனர்.

எப்போதெல்லாம், சிறுபான்மையினரை ஒடுக்க நினைக்கின்றனரோ, அப்போதெல்லாம் தளபதி மு.க.ஸ்டாலின் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். சிஏஏன்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டு வருவவோம் என தளபதி கூறினார். ஆனால், மேலவையில் உள்ள அதிமுக உறுப்பினர்கள், 11 பேரும் அதிமுக எம்பியான, ஓபிஎஸ்சின் மகன், பாமக அன்புமணியும் ஆதரித்து வாக்களித்தனர்.



ஜமாத்தால் தான் கொரானா பரவியதாக இஸ்லாமியர்களை பாஜக கூறியது. அப்போது, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருந்த ஒரே தலைவர் தளபதி.

தவிழ்ந்து போய் பதவியை பெற்ற எடப்பாடி, சசிகலாவுக்கும், ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் துரோகம் செய்து வருகின்றார். ஜெயலலிதா சாவில் மர்மம் உண்டு என்று கூறியது ஓபிஎஸ். அதன் பிறகு அவரை எடப்பாடி, சேர்த்துகொண்டார். ஆறுமுகசாமி கமிஷனும் அமைக்கப்பட்டது. ஆனால், அதில் ஓபிஎஸ் ஆஜராகவில்லை. தளபதி வந்தவுடன் ஜெயலலிதாவின் மர்ம மரணம் கண்டுபிடிக்கப்படும். அதில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு வங்கி கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் வரும்னு மோடி சொன்னாரு. வந்ததா? கைதட்டுங்க, விளக்கை அணையுங்கணு என்று சொன்னார் மோடி, அதனால் கொரோனா போய் விட்டதா?

கொரோனா காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 5 ஆயிரம் கொடுங்கனு தளபதி கூறினார். ஆனால், எடப்பாடி கொரோனா காலத்தில் ரூ1000 கொடுத்தார். தளபதி சொன்ன மாதிரி, திமுக ஆட்சி வந்தவுடன், ரூ 4 ஆயிரம் கலைஞர் பிறந்தநாளுக்கு வழங்க உள்ளார். கேஸ் ஆயிரம் ரூபாய்க்கு போய் விட்டது. கேஸ்சுக்கு ரூ 100 மானியமும், பெட்ரோல் டீசல் விலையும் குறைக்கப்படும் என தளபதி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.



நம்ம வீட்டு பிள்ளைகள் மருத்துவராக வேண்டும் என ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி கொண்டு வருவேன் என்றார். புதிய கல்வி கொள்கையில் நீட் வரும். இந்த தேர்தல் நமக்கான தேர்தல் மட்டுமல்ல, நம்ம பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற தேர்தல். பாஜகவிற்கு இந்த தேர்தல் மூலம் பாடம் புகட்டுங்கள். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுகவை வெற்றி பெற செய்யுங்கள், என்றார்.

இந்த பிரச்சாரத்தின் போது, தொகுதி பொறுப்பாளர் பூச்சி முருகன், பகுதி கழக பொறுப்பாளர்கள் எஸ்ஏ.காதர், கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...