பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த நெகமம் பகுதியில் இன்று பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜனை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் பரப்புரை மேற்கொண்டார்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த நெகமம் பகுதியில் இன்று பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜனை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்: பொள்ளாச்சி தொகுதியில் சுயேட்சையாக ஜெயராமனை எதிர்த்து போட்டியிட்டு வெல்ல வேண்டிய சபரிமாலாவின் வேட்பு மனுவை திட்டமிட்டு அதிமுகவினர் தள்ளுபடி செய்து விட்டு, தற்போது திமுகவிற்கு ஆதரவாக பேசி வரும் பெண் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சபரிமாலா மீது கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று யார் சொல்வது..? ஏற்கனவே, இங்கு பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதான் உள்ளது. எனவே, பொள்ளாச்சி சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு தகுந்த பாடத்தை மக்கள் ஜெயராமனுக்கு கற்பிக்க வேண்டும்.
சசிகலா காலில் விழுந்த முதலமைச்சர் ஆன எடப்பாடி, அவருக்கே துரோகம் செய்து விட்டார். நீட்டை ஒழிப்பேன் என்று தைரியத்துடன் சொல்லும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான், என்று பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
மேலும், இதைப் பற்றி பேசியதற்காக தன் மீது வழக்குப் பதியபட்டால் அதையும் சந்திக்க தயார் என்று தயாநிதி மாறன் தெரிவித்தார்.